ETV Bharat / bharat

பீகார் மற்றும் ஹரியானா இடது சாரி தீவிரவாதத்திலிருந்து விடுபட்டன - மத்திய அரசு

author img

By

Published : Oct 29, 2022, 12:32 PM IST

பீகார் மற்றும் ஹரியானா மாவட்டங்களில் இருந்த இடது சாரி தீவிரவாதம் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Etv Bharatபீகார் மற்றும் ஹரியானா இடது சாரி தீவிரவாதத்திலிருந்து விடுபட்டன - மத்திய அரசு

சூரஜ்கண்ட் (ஹரியானா): ஹரியானாவில் உள்ள சூரஜ்கண்டில் இரண்டு நாட்கள் நடந்த 'சிந்தன் ஷிவர்' நிறைவு கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து விடுபட்ட மாநிலங்களாக குறிப்பிடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இரண்டு நாட்கள் 'சிந்தன் ஷிவிர்' (சிந்தனைக் கூட்டம்)கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக ஜார்கண்ட் மாநிலம் புராபஹார் பகுதியை நக்சலைட்டுகளின் பிடியில் இருந்து சிஆர்பிஎஃப் விடுவிக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் வெற்றியடைந்ததாக தீர்மானத்தில் கூறப்பட்டது. மேலும் ஜம்மு-காஷ்மீர், இடது சாரி தீவிரவாதம் நிறைந்த பகுதி மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் உள்ள வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு நிலைமை சீராக்கப்பட்டுள்ளதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் இருந்து 9,200 தீவிரவாதிகள் அவர்களது ஆயுதங்களை பாதுகாப்பு படையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம்: நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசும் இந்த தீர்மானத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும், நாட்டின் உள் பாதுகாப்பு என்பது மத்திய மற்றும் மாநிலங்களின் பொறுப்பு எனவும், இந்தியா என்ற ஒற்றுமை உணர்வோடு மத்திய, மாநில அரசுகள் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் நார்கோ(போதைப்பொருள் தடுப்பு மையம்) ஒருங்கிணைப்பு மையம் (NCORD) கூட்டத்தையும் நடத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களும் தொடர்ந்து ஆண்டுதோறும் இலக்குகளை மதிப்பாய்வு செய்து, 2047 இல் தங்கள் உள் பாதுகாப்பு குறித்த திட்டத்தை வழங்க வேண்டும்" எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது. ஹரியானா சிந்தனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இவை அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாரதம் என்பது சனாதன சக்திகளாலும் ரிஷிகளாலும் கட்டமைக்கப்பட்டது - ஆளுநர் ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.