பாட்னா: CTET மற்றும் BTET ஆகிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கான தேர்வாளர்கள் வேலை கேட்டு பாட்னாவின் டாக் பங்களா சௌராஹா தெருக்களில் போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.
அந்த வீடியோவில், மாவட்ட துணை ஆட்சியரும், சட்டம் மற்றும் ஒழுங்கு அதிகாரியான கே.கே.சிங், போராட்டக்காரர் ஒருவரை தடியால் தாக்குகிறார். போராட்டம் செய்த தேர்வர்கள் கையில் மூவர்ணக் கொடியை ஏந்தியவாறு போராட்டம் செய்தனர். இந்நிலையில் இவர் தாக்கிய தேர்வாளர் தரையில் கிடக்கிறார். அவரை அந்த துணை ஆட்சியர் தடியால் அடிக்கிறார். இந்த தாக்குதலில் அவரது முகம் மற்றும் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்து, வலியால் துடிப்பதும் அந்த வீடியோவில் உள்ளது.
அந்த அதிகாரி மூவர்ணக் கொடியை அவமரியாதை செய்தார். உடனே, போராட்டக்காரர் கையில் இருந்த தேசியக் கொடியை காவலர் ஒருவர் பறித்தார். இந்த தாக்குதலில் போராட்டக்காரர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து துணை ஆணையரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முற்பட்ட போது, போராட்டக்காரர்கள் கைகலப்பில் ஈடுபட்டதாக தகவல் அளித்தார். மேலும் போராட்டக்காரர் முதல்வர் நிதிஷ் குமாரை அவமானப்படுத்தி பேசியதாக அந்த அதிகாரி குற்றம்சாட்டினார்.
-
ये बिहार की सरकार और उसके अधिकारी हैं. इन्होंने न सिर्फ शिक्षक अभ्यर्थी के सिर और चेहरे पर बेरहमी से लाठी मार कर लहूलुहान कर दिया बल्कि तिरंगे का भी अपमान किया. ये पटना के ADM (L&O) के. के. सिंह हैं. pic.twitter.com/0PVCn9BGNb
— Utkarsh Singh (@UtkarshSingh_) August 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ये बिहार की सरकार और उसके अधिकारी हैं. इन्होंने न सिर्फ शिक्षक अभ्यर्थी के सिर और चेहरे पर बेरहमी से लाठी मार कर लहूलुहान कर दिया बल्कि तिरंगे का भी अपमान किया. ये पटना के ADM (L&O) के. के. सिंह हैं. pic.twitter.com/0PVCn9BGNb
— Utkarsh Singh (@UtkarshSingh_) August 22, 2022ये बिहार की सरकार और उसके अधिकारी हैं. इन्होंने न सिर्फ शिक्षक अभ्यर्थी के सिर और चेहरे पर बेरहमी से लाठी मार कर लहूलुहान कर दिया बल्कि तिरंगे का भी अपमान किया. ये पटना के ADM (L&O) के. के. सिंह हैं. pic.twitter.com/0PVCn9BGNb
— Utkarsh Singh (@UtkarshSingh_) August 22, 2022
இதையும் படிங்க:பாஜக மகளிரணி தலைவர் சோனாலி போகட் காலமானார்