அமராவதி(ஆந்திரா): பிரபல பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை வரும் அக்.11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர் கேத்தி ஜெகதீஸ்வர ரெட்டி என்பவர் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று (செப்.30) நடைபெற்றது. அப்போது, வழக்கறிஞர் சிவபிரசாத் ரெட்டி, பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ ஐபிஎஃப் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் ஆபாசத்துடன் நடத்துவதாக மனுதாரர் தரப்பில் வாதிட்டார்.
இது குறித்து, விளக்கமளிக்க மத்திய அரசின் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டார். இதையடுத்து, எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து அடுத்த ஒத்திவைப்பில் முடிவு செய்யப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்து, அடுத்த விசாரணை வரும் அக்.11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு காவல்துறை மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம் - திருமாவளவன்