காந்திநகர்: நடந்து முடிந்த குஜராத் சட்டபேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக முதலமைச்சராக இருந்த பூபேந்திர படேல் தான் போட்டியிட்ட கட்லோடியா தொகுதியில், 1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
குஜராத்தில் 7ஆவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதையடுத்து பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. பழைய அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.
இந்த நிலையில், நாளை(டிச.12) குஜராத்தில் பாஜகவின் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. காந்தி நகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக பூபேந்திர படேல் மற்றும் 20 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்வு