காந்திநகர்: குஜராத் மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதலமைச்சராக பூபேந்திர படேல் சட்டப்பேரவை பாஜக கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. குறிப்பாக, பூபேந்திர படேல் அகமதாபாத்தின் கட்லோடியா தொகுதியில் நின்று 1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் 2ஆவது முறையாக வெற்றி பெற்றார். இதையடுத்து பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது. புதிய அமைச்சரவைக்காக பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டது.
இந்த புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா காந்திநகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் என்று குஜராத் பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 10) காந்திநகரில் நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக பூபேந்திர படேல் பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க: இந்தியாவில் அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருக்கக்கூடும்: விஞ்ஞானிகள் கணிப்பு