ETV Bharat / bharat

Cyclone Jawad: அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெறும் புயல்; பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

author img

By

Published : Dec 3, 2021, 11:00 AM IST

Updated : Dec 3, 2021, 2:11 PM IST

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்திற்குள் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஜவாத் புயலால் தமிழ்நாடு, புதுச்சேரியின் ஆறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தமிழ்நாட்டில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம், Depression To Intensify Into Cyclonic Storm during next 12 hours, Red Alert for Odisha Districts, Jawad Cyclone
Jawad Cyclone

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்திலிருந்து தென் - தென்கிழக்கு திசையில் 850 கி.மீ தொலைவிலும், ஜகத்சிங்பூர் மாவட்டத்திலிருந்து தென் - தென்கிழக்கு திசையில் 920 கி.மீ தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்திற்குத் தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளது புவனேஷ்வர் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயலுக்கு 'ஜவாத்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர் மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பல மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4), நாளை மறுதினம் (டிசம்பர் 5) ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜவாத் புயலால் தமிழ்நாட்டின் எண்ணூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர், புதுச்சேரி, பாம்பன் ஆறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய புயல் முன்னெச்சரிக்கை: மத்திய அரசு அவசர ஆலோசனை

Last Updated : Dec 3, 2021, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.