ETV Bharat / bharat

பீமா கோரேகான் வழக்கு: சரத் பவாரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய முடிவு

பீமா கோரேகான் மோதல் வழக்கு தொடர்பாக சரத் பவாரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய, விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது.

pavar
sarath pavar
author img

By

Published : Jul 9, 2021, 7:02 PM IST

மும்பை: 2017ஆம் ஆண்டு டிசம்பரில் மகாராஷ்டிராவின் புனே அருகே பீமா கோரேகான் என்ற பகுதியில், இருதரப்பினருக்கு இடையேயான மோதல் பெருங்கலவரமாக வெடித்து. இதில், காவல் துறையினர் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசியப் புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட மனித உரிமைகள் ஆர்வலரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் முன்னதாக உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விவகாரத்தில் பலர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பல அரசியல் கட்சியினரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஸ்டேன் சுவாமி மறைவைத் தொடர்ந்து, இவ்வழக்கு தற்போது மீண்டும் வீரியம் எடுத்துள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய விசாரணை ஆணையம் ஒன்றை மகாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது.

இந்த விசாரணை ஆணையம் முன்பு சரத் பவார் ஆஜராகவுள்ளார். மேலும், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜார்கன்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, மதசார்பாற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி தேவகவுடா, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், சிபிஐ ராஜா, சிபிஎம் எம்பி சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஸ்டேன் சாமி மரணம் குறித்து குடியரசுத் தலைவருக்கு இது குறித்து கூட்டாக கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.