உலகளவில் நிலவிவரும் கரோனா ஊரடங்கு காரணமாக, தனிநபர் முதல் பெருநிறுவனங்கள் வரை அனைவரின் விருப்பத்திற்குரிய செயலியாக ஸூம் (Zoom App) உருவெடுத்துள்ளது. இந்தச் செயலி சீனாவில் உருவாக்கப்பட்டது. ஸூம் செயலியைப் பயன்படுத்தி பல இடங்களில் காணொலி கலந்தாய்வு நடைபெற்றது.
தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து வேலை பார்க்கின்றனர். அப்படி வீட்டிலிருந்து வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு ஸூம் செயலி ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் நான்கு நபர்களுக்கு மேல் காணொலி அழைப்பில் பேச முடியாது. ஆனால், இந்த ஸூம் செயலியைப் பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் காணொலி அழைப்பில் பேச முடியும். இதுவே இந்தச் செயலியின் முக்கிய அம்சமாகும்.
இந்நிலையில், ஸூம் செயலி பாதுகாப்பற்றது என்ற அதிர்ச்சித் தகவலை மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்தச் செயலியைப் பயன்படுத்த வேண்டாமென அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு எச்சரித்தது.
இதனால் இதற்குப் பதிலாக வேறு ஒரு முறையில் காணொலி கலந்தாய்வை நடத்த சுகாதாரத் துறை முடிவுசெய்துள்ளது.
இதையும் படிங்க: உஷார்...அரசு பயன்பாட்டிற்கு ஸூம் ஆப் பாதுகாப்பற்றது - உள்துறை அமைச்சகம்