ஊரடங்கால் ஒரு மாத காலமாக வீட்டில் முடங்கிருந்த மக்கள், சில தளர்வுகளுக்கு அனுமதியளித்து கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டத்தை வெளியே காணமுடிகிறது. குறிப்பாக, மதுபான கடைகளைத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற சிவப்பு, ஆரஞ்ச், கிரீன் ஆகிய மூன்று மண்டலங்களிலும் திறப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
மதுபானக் கடைகள் திறக்கப்பட்டாலும், மதுபானங்கள் விற்பனை விலையை டெல்லியில் 70 விழுக்காடும், தெலங்கானாவில் 16 விழுக்காடும் அதிகரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மக்களின் வயதிற்கு ஏற்ப மதுபானங்கள் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கரோனா அச்சம் நாட்டில் இருப்பதால், மக்கள் வெளியே செல்ல யோசிக்கின்றனர். எனவே, மதுபானத்தைத் டோர் டெலிவரி செய்ய சொமேட்டோ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மதுபானம் வாங்க டோக்கன் சிஸ்டம்!