புதுச்சேரி மாநிலம், கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் விநாயகம் (62). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் பிரதாப்பும் (21) இன்று அதிகாலை தகராறில் ஈடுபட்டனர்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த முதியவர், பிரதாப்பை கத்தியால் மார்பில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த பிரதாப்பை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு வாலிபர் பிரதாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை கத்தியால் குத்திய முதியவர் விநாயகத்தை கைது செய்தனர்.
இதையும் படிங்க: மதுக்கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது!