கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மாவட்டத்தில் ரிச்மண்ட் வட்டம் அருகே சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் மற்றும் அதன் பின்னால் நின்ற இருசக்கர வாகன ஓட்டி மீது மதுபோதையில் கார் ஓட்டிவந்த ரோஹித் கெடியா என்பவர் வேகமாக மோதினார்.
இந்த சம்பவத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு கார் டிரைவர் ஸ்ரீகாந்த் பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்தில் உயிரிழந்தவர் காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த கிரண் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட ரோஹித் கெடியா கைது செய்யப்பட்டு, வில்சன் கார்டன் போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பூர் பஸ் கண்டக்டர் வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு!