மாதந்தோறும் வரும் பஞ்சமி திதியில் மிகவும் விஷேஷமானதாகப் பார்க்கப்படுவது வசந்த பஞ்சமி (Basant Panchami). இந்து மதக் கடவுள் கிருஷ்ணன், இந்த வசந்த பஞ்சமி தினத்தில்தான் தனது கல்வியைத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், வசந்த பஞ்சமி தினமான இன்று, கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடமான பிரக்யாராஜ் பகுதியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புனித நீராடினார்.
அப்போது அம்மாநில பாஜக தலைவர் ஸ்வதாந்த்ரா தேவ் சிங், அமைச்சர் சித்தார்த் நாத் சிங் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர். மேலும், பூஜை உள்ளிட்டவையும் அந்த இடத்தில் யோகி ஆதித்யநாத் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, நேற்று மாலை பிரக்யாராஜ் பகுதிக்கு வருகைதந்த யோகி ஆதித்யநாத், பல்வேறு மத குருக்கள், சாமியார்கள், அரசு அலுவலர்களுடன் வசந்த பஞ்சமி முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: 'குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்' - யோகி ஆதித்யநாத்