உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூரில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஜனதா தர்பார் (மக்கள் ஆட்சி) என்றப் பெயரில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுவாக அளித்தனர்.
யோகி ஆதித்யநாத்தை சந்தித்த ஒருவர் கூறும்போது, “எனது நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதுபற்றி முதலமைச்சரிடம் முறையிட்டேன். அவர் இதுபற்றி ஆராய்வதாக கூறினார்” என்றார். வரதட்சணை கொடுமையால் தனது மகளை இழந்த பெண் கூறுகையில், “திருமணம் செய்து கொண்ட சில நாள்களில் எனது மகளை வரதட்சணை கொடுமையால் இழந்தேன். இதுகுறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதாக இல்லை. இது குறித்து முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்” என்றார்.
இந்திய ராணுவ வீரர் சத்யவான் சிங், “திருட்டு வழக்கு ஒன்று குறித்து முதலமைச்சர் கவனிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் யோகி ஆதித்யநாத் ஜனதா தர்பாரை நடத்திவருகிறார்.
இதையும் படிங்க: சிவராத்திரி இளைஞர்கள் மத்தியில் கலாசாரத்தை கொண்டு செல்லும்'- வெங்கையா நாயுடு