உத்தரப் பிரேதச மாநிலம் சோன்பத்ராவில் இரு சமுதாயங்களுக்கிடையே நடைபெற்ற வன்முறையில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா காந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "இந்தக் கலவரத்தில் தொடர்புடைய காவல் துறை அலுவலரை இடைநீக்கம் செய்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.18.5 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்" என்றார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை யோகி ஆதித்யநாத் விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் எனக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை யோகி சந்திக்காதது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.