மக்களவைத் தேர்தல் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணத் தொடங்கியதில் இருந்து பாஜக பெருவாரியான இடங்களில் முன்னணியில் இருந்துவருகிறது. மாலை 3 மணி வரையில் பாஜக கட்சி 343 இடங்களிலும், காங்கிரஸ் 85 இடங்களிலும், பிற கட்சிகள் 114 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
பிரதமர் மோடி தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளரை தோற்கடித்தார். காந்தி நகரில் போட்டியிட்ட அமித் ஷா ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். அதேபோன்று பாஜக வேட்பாளர்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்று வருகின்றனர்.
இந்நிலையில், 343 இடங்களில் முன்னணியில் உள்ளதால், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. இதையொட்டி மோடி, அமித் ஷா ஆகியோருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் - பிரதமர் மோடி, அமித் ஷாவினை பாராட்டியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகள். பாஜக முதல் முறையாக 300 தொகுதிகளில் வெற்றியை பெற்றுள்ளது. அதேபோன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களை பிடித்துள்ளது. இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்த அமித் ஷாவிற்கு பாராட்டுகள், என்று பாராட்டியுள்ளார்.