ETV Bharat / bharat

யெஸ் வங்கி முறைகேடு: டிராவல் ஏஜென்ஸியில் அதிரடி ரெய்டு! - வருமான வரித்துறை ரெய்டு

மும்பை: யெஸ் வங்கி முறைகேடு தொடர்பாக மும்பையிலுள்ள பிரபல டிராவல் ஏஜென்ஸியின் ஐந்து வளாகங்களிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர்.

Yes Bank case  Yes Bank  ED  raid  Cox and Kings  PMLA  யெஸ் வங்கி முறைகேடு  காக்ஸ் அண்ட் கிங்ஸ்  வருமான வரித்துறை ரெய்டு  மும்பை

author img

By

Published : Jun 8, 2020, 7:00 PM IST

Updated : Jun 8, 2020, 7:13 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரபல உலக சுற்றுப்பயண நிறுவனமான (டிராவல் ஏஜென்ஸி) காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனம் செயல்பட்டுவருகிறது.

இந்நிறுவனம் யெஸ் வங்கியில் இரண்டாயிரத்து 260 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறை அலுவலர்கள் நிறுவனத்தின் ஐந்து வளாகங்களிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சோதனை குறித்து அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், “பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சோதனை நடைபெற்றுவருகிறது” என்றார்.

யெஸ் வங்கியில் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கடன்கள் ஒழுங்கான முறையில் திருப்பி செலுத்தப்படாததால், வங்கியில் செயல்படாத சொத்துகள் (என்.பி.ஏ.) பெருமளவு அதிகரித்தது. இதனால் வங்கியை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் விசாரணை நடந்துவருகிறது. முன்னதாக மார்ச் மாதம் யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் மீதான விசாரணை மும்பையிலுள்ள பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இதையும் படிங்க: ரூ. 250 கோடியில் டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்க புது திட்டம் - ரிசர்வ் வங்கி

Last Updated : Jun 8, 2020, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.