யெஸ் வங்கி நிதிமுறைகேடு தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியை அமலாகத்துறையினர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து மும்பையில் உள்ள அமாலக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி இன்று காலை நேரில் ஆஜரானார்.
அனில் அம்பானி குழுமம் யெஸ் வங்கியிடம் விதிமுறைகளை மீறி 12 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்கியிருந்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யெஸ் வங்கி முறைகேட்டில் டி.எச்.எஃப்.எல். நிறுவனத் தலைவர் தீரஜ் வாதாவான், கபில் வாதாவான் ஆகியோர் நேற்று ஆஜராக உத்தரவிட்டிருந்தநிலையில் கோவிட்-19 பாதிப்பின் காரணமாக நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு பெற்றனர். ஊழல் புகாரில் சிக்கிய டி.எச்.எஃப்.எல். நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய் நிதியை ராணா கபூர், அவரது மனைவி, மூன்று மகள்கள் ஆகியோரின் வங்கிக் கணக்களுக்குச் செலுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. டி.எச்.எஃப்.எல் நிறுவனத்திற்கு யெஸ் வங்கி சார்பில் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ராணா கபூர் குடும்பம் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இன்டஸ்இண்ட் வங்கி!