ETV Bharat / bharat

ஓராண்டு ஊதியத்தை நிவாரண நிதியாக அளித்த கர்நாடக முதலமைச்சர்! - கர்நாடாவில் கரோனா

பெங்களூரு: கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான மீட்பு நடவடிக்கைகளுக்காக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தனது ஓராண்டு ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

Yediyurappa
Yediyurappa
author img

By

Published : Apr 1, 2020, 3:31 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் இந்தியாவில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் தற்போதுவரை 1,637 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக பிரதமரின் உத்தரவின்படி ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

இந்தியா தற்போது சந்தித்துவரும் பெரும் நெருக்கடி நிலையை சமாளிக்க உதவ பொதுமக்களும் நிறுவனங்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதேபோல மாநில வாரியாகவும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனது ஓராண்டு ஊதியத்தை வழங்குவதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இது குறித்து அவர், "இப்போது நாம் அனைவரும் மிகக் கடினமான சூழ்நிலையில் உள்ளோம். இந்தப் பெருந்தொற்றுநோயை ஒழிக்க நாம் ஒன்றாக எதிர்த்துப் போராடுவது அவசியம்.

  • It is a very difficult time that we are all going through. And it is important that we fight this epidemic together. Personally, I am donating my one year's salary to the #CMRF Covid19. I request you all to contribute, however small, and help #Karnataka fight #Corona.
    Thank you pic.twitter.com/15jwrk1Ixz

    — B.S. Yediyurappa (@BSYBJP) April 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தனிப்பட்ட முறையில், கோவிட்-19 வைரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு நான் எனது ஓராண்டு சம்பளத்தை அளிக்கிறேன். நீங்கள் அனைவரும் எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் அளிக்கலாம். கரோனாவுக்கு எதிராகப் போராட கர்நாடகாவுக்கு உதவுங்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், நிவாரண நிதியை மக்கள் வரைவோலை (டிடி) மூலமோ காசோலை (செக்) மூலமோ இணைய பரிமாற்றம் மூலமோ அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார.

இதையும் படிங்க: நாட்டில் 1, 637 பேருக்கு கரோனா பாதிப்பு, 38 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.