தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பாக நியமிக்கப்பட்ட யமுனா நதி கண்காணிப்புக் குழுவினர், டெல்லி மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் ஊரடங்கின்போது யமுனா நதியின் நீரின் தரம் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள அறிவுறுத்தியது.
இந்த ஆய்வில் வாஜூராபாத்திலிருந்து வெளியேற்றப்படும் நீராலும், நஹாஃப்கார் மற்றும் ஷாதாரா ஆகிய வடிகால்களிலிருந்து வரும் நீராலும் யமுனா நதியில் உள்ள நீரின் தரம் 5 முதல் 6 விழுக்காடு உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யமுனா நதியில் உள்ள நீரின் தரம் உயர்ந்ததற்கு, புதிய நீரின் கலப்பு முக்கிய பங்காற்றியுள்ளது என டெல்லியின் முன்னாள் தலைமை செயலர் சந்திரா தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஊரடங்கு காலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 51 ஆயிரம் தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை. அதனால் கழிவு நீர் வெளியேறும் குறைந்துள்ளன.
அதேபோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை வடிகால்கள் மூலம் தடுப்பதும் நீரின் தரம் உயர்ந்ததற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு சூழலில் மக்கள் நதியில் வீசும் பூஜை பொருள்கள், குப்பைகள், துணி துவைப்பது ஆகியவைக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் யமுனா நதியின் நீரின் தரம் உயர முக்கியப் பங்காற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: என்னை இங்கே புதையுங்கள்... டாக்டர் சைமனின் கடைசி ஆசை!