ETV Bharat / bharat

'தனது பலத்தை பெருக்கவே எல்லைத் தகராறை கையிலெடுத்த சீனா!' - மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா

டெல்லி: இந்திய - சீன எல்லையான லடாக்கில் உள்ள தெம்சோக், கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, சிக்கிமில் உள்ள நாகு லா ஆகிய பகுதிகளில் இருநாட்டு ராணுவங்களும் மோதல் போக்கில் குவிந்துள்ளன. இந்தச் சூழல் குறித்து முன்னாள் உளவுத் துறை அலுவலரான ஜெயதேவ் ராண்டேவுடன் மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா விரிவான நேர்காணல் மேற்கொண்டார். அதன் தமிழாக்கம் இதோ...

ரான்டே
ரான்டே
author img

By

Published : May 30, 2020, 11:05 AM IST

கேள்வி: எல்லைத் தகராறு தொடர்பாக சீனாவிலிருந்துவரும் எதிர்வினைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

சீனா எந்தத் தொல்லையும் இல்லாமல் அமைதியான முறையில் இந்தச் சிக்கலை அணுகும்பட்சத்தில் இதுபோன்ற அத்துமீறல் நடைபெறாது. எனவே, இரு நாட்டின் விதிமுறைகளை மீறித்தான் இதுபோன்ற அத்துமீறல் அரங்கேறியுள்ளது. எனவே, இந்த அத்துமீறலுக்கான நோக்கத்தை நாம் கண்டறிய வேண்டும். அதற்கு இரு நாட்டுப் பிரதிநிதிகளும் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை மேற்கொண்டு, அடுத்தகட்ட முன் நகர்வை மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி: ட்ரம்பின் மத்தியஸ்தம் கருத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

இதுபோன்ற கருத்துகளை அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தான் விவகாரத்திலேயே தெரிவித்துள்ளார். இம்முறை அவர், இந்தியா - சீனா இடையே மத்தியஸ்தராக இருந்து நிலைமையைச் சீராக்க முன்வருகிறேன் என்கிறார். இதை சீனா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்தியாவும் விரும்பாது. எனவே, அவரது கருத்து, கூறிய கணத்திலேயே இறந்துவிட்டதாகக் கொள்ளலாம்.

கேள்வி: இந்த விவகாரத்தைக் கொண்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கின்றனவா?

இந்தியாவிடம் சீனா அத்துமீறும்போது இந்தியாவே அதற்குத் தக்க பதிலடியைத் தந்துவிடும். அதேவேளை, சீனாவுக்கு எதிராகப் பெரும் அதிருப்தி உலக நாடுகள் மத்தியில் நிலவிவருகிறது. இந்தச் சீனா எதிர்ப்புப் பாதையை அமெரிக்கா தலைமைத் தாங்கி முன்னின்று நடத்துகிறது. ஆனால் இந்த விவகாரத்தை அவசரகதியில் முடிவுகள் ஏதும் எடுக்காது. கவனத்துடனே இந்த விவகாரத்தை அணுகும்.

கேள்வி: இந்த விவகாரத்தை சீனா உள்நாட்டு-வெளிநாட்டு சவால்களைத் திசைதிருப்பும் யுக்தியாகக் கையாளுகிறதா?

நிச்சயமாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு தற்போது பெரும் அழுத்தம் உள்ளது. குறிப்பாக கரோனாவுக்குப்பின் அந்நாட்டு மக்களுக்கு அரசின் மீது பெரும் அதிருப்தி உருவாகியுள்ளது. எனவே, இதை எதிர்கொள்ளும்விதமாகவே இந்திய எல்லைப் பிரச்னையை சீனா எடுத்துள்ளது. இது அந்நாட்டு மக்களுக்கு உணர்வுரீதியாக அரசின் மீதான எண்ணத்தை உயர்த்தும் ஒரு யுக்தியாக சீன அரசு இதைக் கையிலெடுத்துள்ளது.

ஜெயதேவ் ராண்டேவின் முழுமையான நேர்காணல்

இதையும் படிங்க: போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஆப்பிரிக்க நாடுகள் செவிசாய்க்க வேண்டும் - ஐநா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.