கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளையும், இழப்புகளையும் ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு சில நடவடிக்கைளை மேற்கொண்டுவருகிறது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நிதியாக மாநில அரசுகள் மக்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் என்பது போன்ற நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனா அச்சுறுத்தலால் ஏற்படும் நாட்டின் பொருளாதார இழப்பீடு குறித்தும், பொதுமக்களின் பாதிப்பு குறித்தும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ஊரடாங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் சேமிப்பு கணக்குகளின் மூலம் வரும் வட்டித் தொகையை நம்பியே பெரும்பான்மையான நடுத்தர குடும்பங்கள் உள்ளன. இந்நேரத்தில், வங்கிகளில் சிறுசேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்திருப்பது, நிர்வாக ரீதியில் நல்ல முடிவுவாகத் தோன்றினாலும், இதற்கு சரியான நேரம் இதுவல்ல என்று கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த வட்டி விகித குறைப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் பார்க்க: ஓராண்டு ஊதியத்தை நிவாரண நிதியாக அளித்த கர்நாடக முதலமைச்சர்!