ETV Bharat / bharat

கவலை தரும் சீனா ஊடுருவல் - இந்திய சீனா மோதல்

இந்தியா - சீனா எல்லையான லடாக்கில் உள்ள தெம்சோக், கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, சிக்கிமில் உள்ள நாகு லா ஆகிய பகுதிகளில் இரு நாட்டு ராணுவங்களும் மோதல் போக்கில் குவிந்துள்ளன. இந்தச் சூழல் குறித்து வெளியுறவுத்துறையின் முன்னாள் உயர் அலுவலர் விஷ்ணு பிரகாஷ் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்

Chinese
Chinese
author img

By

Published : Jun 1, 2020, 5:27 PM IST

லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் எனப்படும் இந்திய - சீன எல்லைப்பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரும் திரண்டுள்ளதால் மோதல் போக்கு நிலவிவருகிறது. ஊடகங்கள் வெளியிடும் தகவலின்படி, சீனா சுமார் 4,000 துருப்புகள் மற்றும் கனரக உபகரணங்களை அணி திரட்டி நிறுத்தியுள்ளது. இதுபோன்ற ஒருங்கிணைந்த ஊடுருவல்கள் சீனாவின் தலைமையின் அனுமதி இல்லாமல் நடந்திருக்க முடியாது. வூஹான் மற்றும் மகாபலிபுரம் முறைசாரா உச்சி மாநாட்டு நடத்தப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் வலுப்படுத்தப்பட்டது. அப்படியிருக்கு இருதரப்பு புரிதலும் தற்போது சிக்கலாக மாறியுள்ளதன் பின்னணி என்ன?

தற்போது அது அனுபவிக்கும் உலகளாவிய அதிருப்தி போக்கு சீனாவுக்கு மிகவும் புதியது. 1918-20 ஸ்பானிஷ் காய்ச்சலுக்குப் பின்னர் மனிதகுலத்திற்குத் சந்திக்கும் கொடிய பெருந்தொற்றுநோயின் பிறப்பிடமாகத் தற்போது சீன கருதப்படுகிறது. வெளிநாட்டு மூலதனமும் தொழில்துறையும் அந்நாட்டை விட்டு வெளியேறுகின்றன. சீனா ஒரு சுயநல அரசு எனவும் மற்ற நாடுகளை ஏய்த்து குளிர்காயும் பெருஞ்சக்தி என்ற உலகளாவிய கருத்து தற்போது பலப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வீட்டோ அதிகாரம் உள்ள சீனா கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஏற்படும் அழிவைப் பற்றி விவாதிப்பதைத் தடுத்தது. ஆனால் உலக சுகாதார சபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைவுத் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலை சீனாவில் தவிர்க முடியவில்லை. ஆப்பிரிக்காவில் சுகாதார வசதிகளை அமைப்பதற்காக சுமார் 2 பில்லியன் டாலர் உதவியைச் செய்வதன் மூலம் அங்குதன் இருப்பை உயர்த்திக்கொள்ள சீனா தயரானது.

இதன் மூலம் உலக தலைமை என்ற போட்டியில் அமெரிக்காவுடன் சீனா போட்டிப்போட்டுவருகிறது. இந்த சூழலில்தான் கரோனா தாக்கம் சீனா மீதான வெறுப்பாக உலகநாடுகள் மத்தியில் பிரதிபலித்துவருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தத்திற்கு சீனவின் உள்ளாகியுள்ளதுடன். சீனாவிடம் இருந்து இரண்டு டிரில்லியன் டாலர்களுக்கு இழப்பீடு கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்க நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது. இதற்கு பதில் தரும் விதமாக சீனாவின் வெளியுறவு மந்திரி வாங்யி, அமெரிக்காவில் ஒரு அரசியல் வைரஸ் பரவி வருகிறது, அந்த வைரஸ் மூலம் சீனாவைத் தாக்கவும் தகர்க்கவும் ஒவ்வொரு வாய்ப்பையும் அமெரிக்கா தீவிரமாகப் பயன்படுத்துகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில், வேறு எந்த நாடும் தனது தவறுகளை திருத்திக்கொண்டு, சர்வதேச சமூகத்துடன் உறவுகளை சரிசெய்யவே விரும்பியிருக்கும். ஆனால் சீனா அவ்வாறு நடக்கவில்லை. அவர்கள் தென் சீனக் கடலில் மேலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தைவானை மிரட்டியும், ஹாங்காங்கின் சுயாட்சியை நீர்த்துப்போகும் முயற்சியையும் மேற்கொண்டுவருகின்றனர்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, தற்போதைய நிலையில் ஹாங்காங்கில் இனி தன்னாட்சி என்பது இல்லை என்பதைக் காட்டுகிறது எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக ஹாங்காங்குக்கு வழங்கப்பட்ட பொருளாதாரச் சலுகைகளை அமெரிக்கா பொருளாதாரத் தடைகளாக மாற்ற வழி வகுக்கிறது.

இந்நிலையில்தான் இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் தற்போதைய பூசல் என்பது வெளிப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சீனப்படையினர் 400-500 ஊடுருவல்கள் நடத்திவருகின்றனர், ஆனால் அவை விரைவாக தீர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், சில மோதல்கள்தான் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடைசியாக, 2017 ஆம் ஆண்டில், டோக்லாம் பகுதியில் நடைபெற்ற பூசலைத் தீர்க்க 72 நாட்கள் ஆனது. தற்போது அதேப்போல் ​​கால்வான் பள்ளத்தாக்கைச் சுற்றியும், லடாக்கிலுள்ள எல்லைப்பகுதியிலும் இந்த மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் மே 26 அன்று சீனாவின் ராணுவமான மக்கள் விடுதலை ராணுவத்திடம், ​​அதிபர் ஜி ஜின்பிங் சூசகமாக அவர்களை போருக்கு தயார்நிலையில் இருக்குமாறு தெரிவித்தார். ஆனால் நிலை மோசமாகத வகையில், இரு தரப்பும் ராணுவ, இராஜதந்திர மற்றும் அரசியல் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. எனவே, இந்த பிரச்சினை அமைதியாக தீர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இந்தியா தற்போது ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது.

இதையும் படிங்க: அமெரிக்க உயிர்களுக்கு மட்டும்தான் ட்வீட்டா? - இந்திய பிரபலங்களைச் சாடும் உமர் அப்துல்லா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.