சீனாவில் பாண்டா கரடிகள் அதிகளவு வசிக்கின்றன. இந்நாட்டின் செங்டு என்ற பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவில் பாண்டா கரடியொன்று ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றது.
ஒரே பிரசவத்தில் இரட்டை பாண்டா கரடிகள் பிறப்பது மிகமிக அரிதானது. அந்த வகையில் இது, இந்தாண்டு உலகின் முதல் பாண்டா கரடி இரட்டையர்கள் ஆகும்.
இந்த இரு குட்டிகளும் 159.8 மற்றும் 119.5 கிராம் எடையில் உள்ளன. இந்தக் குட்டிகளை சீன பாண்டா கரடிகள் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் வெகுவாக வரவேற்றுள்ளது. தற்போது இரு பாண்டா கரடி குட்டிகளும் தாயிடம் தாய்ப்பால் அருந்துகின்றன.
மேலும் இரண்டு கரடிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன. இந்த இரண்டு குட்டிகளை ஈன்ற தாய் பாண்டா ஃபுவாவுக்கு 17 வயதாகிறது.
இந்த வயதுக்குள் ஐந்து பிரசவம் கண்ட ஃபுவா, எட்டு குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் நிலையில் இரண்டு குட்டிகளை ஈன்ற ஃபுவா கரடி கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பனிக்கட்டியைப் பார்த்ததும் என்ன ஒரு ஆனந்தம் அந்த பாண்டா கரடிக்கு!