ETV Bharat / bharat

உலக அகதிகள் தினம் - மனித குலத்தின் முன் நிற்கும் கடமை என்ன? - ஐரோப்பிய ஒன்றியம் அகதிகள்

உலக அகதிகள் தினம் இன்று (ஜூன் 20) கொண்டாடப்படும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள 7 கோடி அகதிகளுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கடமை மனித குலத்தின் முன் உள்ளது.

Refugee
Refugee
author img

By

Published : Jun 20, 2020, 9:36 PM IST

உலக அகதிகள் தினம் ஆண்டு தோறும் ஜூன் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் நீண்டகாலமாகச் சந்தித்துவரும் இந்த சிக்கலை விரைவில் தீர்க்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. நாடின்றி குடிபெயரும் அகதிகளுக்கு வாழ்வாதரம், அடிப்படை தேவை உள்ளிட்டவற்றை உருவாக்கித்தருவதுடன், அவர்கள் வாழ்வு மேன்மையடையச் செய்வதும் உலக நாடுகளின் கடமையாகும். போர், பயங்கரவாதம், பேரிடர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் 7 கோடி அகதிகள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான மனித உரிமை கவுன்சில் தெரிவிக்கின்றது.

தனது சொந்த நாட்டில் வாழ பாதுகாப்பான சூழல் இல்லாத காரணத்தில் எல்லை கடந்து, வேறு நாட்டில் தஞ்சமடைபவர்களை அகதிகள் என்றோ அடைக்கலம் கேட்பவர் என்றோ ஐக்கிய நாடுகள் வரையறை செய்கிறது. ஐநா சபையின் நடவடிக்கையின் காரணமாக ஜூன் மாதம் 20ஆம் தேதி உலக அகதிகள் தினமாக அங்கீகரிக்கப்பட்டது.

தற்போது உலகம் கரோனா பெருந்தொற்று மற்றும் நிறவெறிப் போராட்டத்தைச் சந்தித்துவரும் நிலையில், இந்தாண்டு மனித உரிமையும் சமத்துவத்தையும் மீட்டெடுக்கும் முழக்கத்தை முன்வைத்து உலக அகதிகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விவரப்படி இந்தியாவில் சுமார் 2 லட்சம் அகதிகள் வசிக்கின்றனர். இவர்கள் மியான்மர், ஆப்கானிஸ்தான், சோமாலியா, திபெத், இலங்கை, பாகிஸ்தான், பாலஸ்தீனம், பர்மா ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

உலகம் தற்போது கரோனா பெருந்தொற்று என்ற எதிர்பாராத சூழலைச் சந்தித்துவருகிறது. இத்தகையச் சூழலில் மற்றவர்களைக்காட்டிலும் அகதிகள் படும் இன்னல் மோசமாக உள்ளது. இதன் தாக்கம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கண்கூடாகத் தெரிகிறது. எனவே, இக்கட்டான சூழலில் மனித குலம் அகதிகளை பாதுகாக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: அகராதியிலிருந்து நீங்குமா அகதி என்னும் சொல்? இப்படிக்கு சக அகதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.