ETV Bharat / bharat

உலக ஹீமோபிலியா தினம் - நாம் அறிந்துகொள்ள வேண்டியவை... - blood leaking

உலக ஹீமோபிலியா தினத்தின் 30ஆவது ஆண்டு இன்று (ஏப்ரல் 17) அனுசரிக்கப்படுகிறது. அதைப் பற்றிய சிறப்பு தொகுப்பு...

WORLD HEMOPHILIA DAY 2020
WORLD HEMOPHILIA DAY 2020
author img

By

Published : Apr 17, 2020, 1:15 PM IST

Updated : Apr 17, 2020, 3:12 PM IST

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17ஆ,ம் தேதி உலக ஹீமோபிலியா (ரத்தம் உறையாமல் போகும் நோய்) தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

ஹீமோபிலியா என்றால் என்ன?

ஹீமோபிலியா என்பது அரிதான பரம்பரை நோயாகும், இதனால் ரத்தம் உறையாமல் போகும் நிலை ஏற்படும். ரத்தத்தை உறையச் செய்யும் புரதங்கள் குறைவாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம். உங்களுக்கு ஹீமோபிலியா இருப்பின், காயம் ஏற்பட்டால் இயல்பாக ரத்தம் உறையும் நேரத்தை விட அதிக நேரம் எடுக்கும், நீண்ட நேர ரத்தக்கசிவு ஏற்படும்.

உலக ஹீமோபிலியா தினம் அனுசரிக்கப்பட்டு இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த தினத்தின் நோக்கம், அதிகமான மக்களை ஒன்றிணைத்து இந்நோய்க்கு எதிராக போராடுவதாகும். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என உலக ஹீமோபிலியா கூட்டமைப்பு விரும்புகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மக்கள் இணைவதன் மூலம், இது குறித்த விழிப்புணர்வு அதிக நபர்களைச் சென்றடையும். இதற்கான மருத்துவம் கிடைக்கும் இடங்களை பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக அறிந்துகொள்ள முடியும். இவை அனைத்தையும் தாண்டி, மக்களுக்காக போராடுகிறோம் என்ற உணர்வு நமக்கு பெருமிதத்தை தரும்.

ஹீமோபிலியாவின் விளைவுகள்:

உங்களுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டால், உடலில் உள்ள ரத்த அணுக்கள் ஒன்றிணைந்து அதனை உறையச் செய்யும். இதனால் ரத்தக்கசிவு விரைவில் நின்றுவிடும். ஹீமோபிலியா ஏற்படுவதற்கு இந்த ரத்த அணுக்களில் உள்ள குறைபாடே காரணமாகும். ஹீமோபிலியாவில் பல வகைகள் உண்டு, ஆனால் பெரும்பான்மையானவை பரம்பரை நோயாக இருக்கிறது.

உலக அளவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30% பேருக்கு மட்டுமே இது வம்சாவளியாக தொடரவில்லை. ஹீமோபிலியாவுடன் தொடர்புடைய மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றமே இவர்களுக்கு அந்நோய் வரக் காரணமாக இருந்திருக்கிறது. இதுபோன்று ஹீமோபிலியா வருவது மிக அரிது, நம் உடலின் எதிர்ப்பு சக்தி ரத்தத்தை உறையச் செய்யும் காரணிகள் மீது நடத்தும் தாக்குதலால் இந்த நிலை ஏற்படுகிறது. கர்ப்பகாலம், புற்றுநோய், திசு இறுகிப் போதல் உள்ளிட்டவை இதோடு தொடர்புடையவை ஆகும்.

ஹீமோபிலியாவின் இறுதிகட்டம்:

எலும்பு மூட்டுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, நீண்டகால மூட்டு வலி மற்றும் நோயை ஏற்படுத்தும்.

தலை மற்றும் மூளைப் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டால், முடக்குவாதம் வர அதிக வாய்ப்புகள் உண்டு.

மூளை மற்றும் உடலின் முக்கிய பாகங்களில் ஏற்படும் ரத்தக்கசிவு நிற்காவிட்டால், உயிரிழப்புக்கான சாத்தியம் உண்டு.

ஹீமோபிலியாவின் வகைகள்:

இந்நோயில் பல வகைகள் உண்டு. ஆனால் முக்கியமான வகைகள் இரண்டு மட்டுமே, அவை பின்வருமாறு

ஹீமோபிலியா ஏ

ஹீமோபிலியா பி

ஹீமோபிலியாவின் அறிகுறிகள்:

எலும்பு மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி அல்லது மூட்டு இறுகிய நிலை ஏற்படும். இதனால் முழங்கால், முழங்கை மற்றும் கணுக்காலில் பாதிப்பு ஏற்படும்.

தோல் அல்லது தசையில் ஏற்படும் ரத்தக்கசிவு, ரத்தக்கட்டை ஏற்படுத்தும்.

பல்லை இழந்த பின்பு வாய் மற்றும் ஈறு பகுதிகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை நிறுத்துவது கடினம்.

ஆண்களின் பிறப்புறுப்பில் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் போதும் ரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்.

மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டாலும் நிறுத்துவது கடினம்.

யாருக்கு பாதிப்பு ஏற்படும் :-

பிறக்கும் 5,000 ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்நோய் இருக்கிறது. அமெரிக்காவில் தற்போது 20 ஆயிரம் பேருக்கு இந்தக் குறைபாடு உள்ளது.

இந்த நோய் அனைத்து இனக் குழுவையும் பாதிக்கக்கூடியது.

மருத்துவரை அணுக வேண்டியது எப்போது:-

மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும் அறிகுறி.

காயத்தில் ரத்தம் நிற்காமல் வழிவது.

வீக்கமான மூட்டுகளில் தொட முடியாத அளவு வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

அதேபோல் உங்கள் பரம்பரையில் யாருக்காவது ஹீமோபிலியா இருந்திருப்பின், மருத்துவரை சந்தித்து மரபணு சோதனை செய்துகொள்வது அவசியம்.

தேசிய ஹீமோபிலியா அமைப்பு வழங்கியுள்ள ஆலோசனைகள்:

ஹீமோபிலியா சிகிச்சை மையத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தடுப்பூசி எடுத்துக்கொண்டால், ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி வருவதை தடுக்க முடியும்.

ரத்தக்கசிவு ஏற்பட்டவுடன் காலதாமதம் செய்யாமல் சிகிச்சை பெறுவது அவசியம்.

உடல்பயிற்சி செய்து எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம், இது எலும்பு மூட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

2019ஆம் ஆண்டு இந்தியாவின் தரவுகள்:-

2019ஆம் ஆண்டு தகவல்களின்படி இதுவரை இந்தியாவில் இந்நோயுள்ள 80% பேர் கண்டறியப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்தாலும், இந்த சூழலுக்குக் காரணம் முறையான மருத்துவ மையங்கள் அமைக்கப்படாதது.

ஹீமோபிலியா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு ஹீமோபிலியா இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஹீமோபிலியா நோயை கையாளும் மருத்துவ நிபுணர்கள்:

டாக்டர். பிரசாத் ராவ் வொலட்டி (மெடன்டா தி மெடிசிட்டி, குர்கான்)

டாக்டர். பங்கஜ் சிங்காய் (மணிபால் மருத்துவமனை, ஹால் விமான சாலை, பெங்களூரு)

டாக்டர். பெஹ்ராம் பர்டிவாலா (ஒக்ஹார்ட் மருத்துவமனை, மத்திய மும்பை)

இதையும் படிங்க: 'ரேபிட் சோதனைக் கருவிகள் வைரஸ் தொற்றைக் கண்டறியப் பயன்படாது'

Last Updated : Apr 17, 2020, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.