ETV Bharat / bharat

'வினை தீர்ப்பான் விநாயகன்' - உலகப் புகழ்பெற்ற சாசிவே காலு விநாயகர் குறித்த தொகுப்பு...! - Hampi Consists of The Legendary Statues

பெல்லாரி: எந்த காரியத்தை துவங்கினாலும் முதலில் விநாயகரை வழிபடுவது வழக்கம். அந்த வகையில், வரலாற்று சிறப்பு மிக்க விருபாட்சர் கோயிலில் உள்ள பாரம்பரியம் கொண்ட விநாயகர் சிற்பங்கள் குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

சாசிவே காலு விநாயகர்
சாசிவே காலு விநாயகர்
author img

By

Published : Aug 24, 2020, 4:04 AM IST

Updated : Aug 25, 2020, 3:29 PM IST

கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹம்பியில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற விருபாட்சர் கோயில். 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் தலைநகராக ஹம்பி இருந்தது. விருபாட்சர் கோயிலில் உள்ள பழமைவாய்ந்த சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளையும், பக்தர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த கோயில் வளாகத்தில் காணப்படும் விநாயகர் சிலை சாசிவே காலு கணபது என்று அழைக்கப்படுகிறது. சாசிவே காலு என்றால் கன்னடத்தில் கடுகு என்று பொருள். 8 அடி உயரம் கொண்ட இந்த விநாயகர் சிலை, திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளது. சிலையின் வயிறு பகுதி கடுகு விதை போல் இருப்பதாக கூறப்படுகிறது. ஹம்பியில் வியாபாரி ஒருவர் கடுகு விற்பனை செய்த பணத்தின் மூலம் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டதால், சாசிவே காலு என்று பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.

உலகப் புகழ்பெற்ற சாசிவே காலு விநாயகர்

மேலும், அதிகமாக உணவு சாப்பிட்ட விநாயகர் தனது வயிறு வெடித்து விடாமல் இருக்க ஒரு பாம்பை எடுத்து தன் வயிற்றில் கட்டிக்கொண்டதாக ஐதீகம். இதனால், விநாயகர் சிலையின் வயிற்றில் பாம்பு சுற்றியிருப்பது போன்று சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் இடம்பெற்றுள்ள கல் தேர், நீர் உள்கட்டமைப்பு, யானை தொழுவங்கள் உள்ளிட்ட சிற்பங்களை விட சாசிவே காலு, கடலேகலு விநாயர் சிற்பம் புகழ்பெற்றவை.

சாசிவே காலு விநாயகரை போல், கடலேகலு விநாயகர் சிற்பமும் ஒரு விற்பனையாளரால் செதுக்கப்பட்டது. வங்காள கிராமத்தை விற்பனை செய்வதற்காக ஹம்பிக்கு வந்த வியாபாரி ஒருவர், தான் பெற்ற லாபத்திலிருந்த கடலேகலு சிற்பம் உருவாக்கியதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.

Last Updated : Aug 25, 2020, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.