ETV Bharat / bharat

ஆரோவில் நாடகத் திருவிழா: உலகத்தரம் வாய்ந்த நாடகங்கள்! - தேசிய நாடகப்பள்ளி நடத்திய நாடகத் திருவிழா

புதுச்சேரி: தமிழ்நாடு, புதுச்சேரியில் முதல்முறையாக நடைபெறும் நாடகத் திருவிழாவில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான நாசர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

நாடகத் திருவிழா
நாடகத் திருவிழா
author img

By

Published : Feb 13, 2020, 4:23 PM IST

இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நாடகப் பள்ளியானது கடந்த 1959ஆம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்டது. உலக நாடுகளின் தலைசிறந்த நாடகப் பயிற்சி நிறுவனங்களில் ஒன்று என்ற பெருமை கொண்ட தேசிய நாடகப் பள்ளி, பாரத் ரங் மஹோத்ஸவ் விழாவை தற்போது நடத்திவருகிறது. முதல்முறையாக தமிழ்நாடு, புதுச்சேரியில் முதல்முறையாக ஆரோவில்லில் நாடகத் திருவிழா நேற்று இரவு தொடங்கப்பட்டது.

இந்த உலகத்தரம் வாய்ந்த நாடகங்கள் வரும் பிப்ரவரி 18ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 7 நாட்கள் நடைபெறும் நாடக திருவிழாவின் முதல் நாடகத்தை திரைப்பட இயக்குநரும் நடிகருமான நாசர், புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வனி குமார் முன்னிலையில் ஆரோவில் ஆதிசக்தி அரங்கில் தொடங்கியது. தொடக்க நாளில் சுவீரன் எழுதி இயக்கிய "பாஸ்கரப் பட்டேளரும் தொம்மியுடே ஜீவிதமும்" என்ற மலையாள நாடகம் அரங்கேற்றப்பட்டது.

ஆரோவில்லில் நடைபெறும் நாடகத் திருவிழா

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நாசர்," கலைக்கு மொழி இல்லை. நான் பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து திரைப்பட புகழ் இருந்தாலும், சிறு குக்கிராமத்தில் மக்கள் முன்பு நடிக்கும் கலைஞனுக்கு ஈடாக மாட்டேன். நாடக கலையை காணும்போது என் ஈகோ மறையும்" என்றார்.

மேலும், நாடகத் திருவிழாவில் இரண்டு மலையாள நாடகங்கள், தமிழ், கன்னடம் மற்றும் ஒரிய மொழிகளில் தலா ஒன்று, வங்கதேசம், செக் குடியரசு நாட்டு நாடகங்கள் என மொத்தம் 7 நாடகங்கள அரங்கேற்றப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆந்திராவில் கொரோனா வைரஸ் தாக்கியதாக நினைத்து ஒருவர் தற்கொலை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.