கரோனா ஊரடங்கு ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பணப்புழக்கத்திற்காகவும், அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும் 750 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவசரகால பங்களிப்பு திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குநர் ஜுனைத் அகமது கூறுகையில், "2020 நிதியாண்டில் (ஜூலை 2019-ஜூன் 2020) உலக வங்கி இந்தியாவுக்கு 5.13 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இது ஒரு மிக உயர்ந்த தொகையாக கருதப்படுகிறது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான சுகாதார பணிகளை மேற்கொள்ள கடந்த மூன்று மாதங்களில் வழங்கப்பட்ட 2.75 பில்லியன் அமெரிக்க டாலர்களும் இதில் அடங்கும்.
இந்த நிதி பகிர்வு பலதரப்பட்ட கடன் வழங்குநரின் மேம்பாட்டுக் கொள்கை சட்டத்தின் பகுக்கப்படும். பணப்புழக்கத்தைத் திறனை வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு நிதி வங்கிகளின் மூலமாக வலுப்படுத்தி நிதியுதவியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) துறையைப் பாதுகாப்பதற்கு இந்திய அரசு எடுத்துவரும் முன்முயற்சிக்கு உதவும் வகையில் இந்த நிதி வழங்கப்படுகிறது" என்று கூறினார்.