ETV Bharat / bharat

பணப்புழக்கத்தை அதிகரிக்க ரூ. 5,250 கோடி கடன் வழங்கும் உலக வங்கி! - பொருளாதார மந்த நிலை

டெல்லி: கரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை சீர்செய்து பணப்புழக்கத்தை அதிகரிக்க சிறு, குறு, நடுத்தர தொழிலாளர்களுக்கு ரூ. 5,250 கோடி கடன் வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.

உலக வங்கி
உலக வங்கி
author img

By

Published : Jul 3, 2020, 3:37 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் ஆறாவது முறையாக ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களிடம் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக மத்திய அரசு உலக வங்கியிடம் கடன் கோரியிருந்தது.

கரோனா நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு, உதவி செய்யும் வகையில் 750 மில்லியன் அமெரிக்க டாலர் எம்எஸ்எம்இ அவசரகால திட்டத்திற்கு உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது" என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2020 நிதியாண்டில் (ஜூலை 2019-ஜூன் 2020), உலக வங்கி இந்தியாவுக்கு 5.13 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்களை வழங்கியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உலக வங்கி இருந்த அளவிற்கு அதிகமாக கடன் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

இது தொர்பாக உலக வங்கிக்கான இந்திய நாட்டின் இயக்குநர் ஜுனைத் அஹ்மத் கூறுகையில்,

"உலக வங்கியின் இந்த நிதி பலதரப்பட்ட கடன் வழங்குநரின் மேம்பாட்டுக் கொள்கை கடனின் கீழ் உள்ளது. இது நேரடி பட்ஜெட் ஆதரவாகும். இந்த கடன் உதவி, நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு நிதி வங்கிகளை வலுப்படுத்தவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ) துறையைப் பாதுக்காக்கவும் உதவும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கான உலக வங்கியின் உதவித் திட்டத்தின், அடுத்த நடவடிக்கையாக பன்முக கடன் வழங்குபவர்கள், எம்எஸ்எம்இ அமைச்சகம் மற்றும் மாநிலங்களுடன் இணைந்து திறன் மேம்பாட்டை உறுதி செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.