ETV Bharat / bharat

உலகவங்கி கைவிரிப்பு; அமராவதி திட்டம் பெரும் பின்னடைவு!

அமராவதி: ஆந்திர மாநிலதிற்கான புதிய தலைநகரான அமராதியை கட்டமைக்கும் திட்டத்திற்கான 20 லட்சம் கோடி நிதித்தொகையை வழங்க உலக வங்கி மறுத்துள்ளது.

author img

By

Published : Jul 19, 2019, 12:04 PM IST

amar

ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேச மாநிலம் 2014ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டதை அடுத்து பிளவுபட்ட ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டது. அந்நகரை சிங்கப்பூர் போல உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பல்வேறு திட்டங்களை அமல்படுத்திவந்தார். மேலும், பெருமளவிலான நிதியுதவியை மத்திய அரசு, உலக வங்கி ஆகிய அமைப்புகளிடம் கோரியிருந்தார்.

இந்நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தோல்வியுற்று புதிய முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றார். புதிதாக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிர்ச்சி அளிக்கு வகையில் உலகவங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமராவதி மாநில திட்டத்தை உருவாக்க சுமார் 45 லட்சம் கோடி தேவைப்படும் நிலையில் அதற்கான 20 லட்சம் கோடியை உலகவங்கி தருவாதாக தெரிவித்திருந்தது. அந்த நிதியுதவியை தற்போது தரமுடியாது என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

world bank
உலக வங்கியின் மறுப்பு

ஏற்கனவே மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் தேக்கம் அடைந்துள்ள நிலையில் உலகவங்கியின் இந்த அறிவிப்பு அமராவதியை கட்டமைப்பதற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.