ETV Bharat / bharat

உடல் பருமன் எதிர்ப்பு தினம்: காரணங்களும், தீர்வுகளும்!

உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த ஆண்டுதோறும் நவம்பர் 26 ஆம் தேதி, சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், இந்த பல பரிமாண கொடிய நோயின் வீரியத்தை புரிந்துகொண்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

பருமன்
பருமன்
author img

By

Published : Nov 26, 2020, 6:52 PM IST

ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்னையாக தற்போது கருதப்படுகிறது. பல சுகாதார அமைப்புகள் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் பணியாற்றிவருகின்றன. உடல் பருமன் தீவிரமான நோயாக கருதப்படுவதற்கான மற்றொரு முக்கியக் காரணம் - இது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற பிற நோய்களுக்கு வழிவகுக்கிறது. எனவே, இதைக் கருத்தில் கொண்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினமாக நவம்பர் 26ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆண்டுதோறும் உடல் பருமன் பிரச்னையால் 2.8 மில்லியன் நபர்கள் உயிரிழக்கின்றனர். அதே சமயம், உலகின் மிகக் குறைவான பருமன் பாதிப்புக்குள்ளான நாடாக வியட்நாம் கருதப்படுகிறது. இங்கு 2.1 விழுக்காடு மக்கள் மட்டுமே கொழுப்பு உள்ளவர்களாக கருதப்படுகிறது.

தற்போது, நாம் தொற்றுநோயுடன் போராடிக்கொண்டிருப்பதால், வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். காலை முதல் மாலை வரை கணினி முன்னால் அமர்ந்தபடியே உணவு உட்கொள்வது, பலருக்கு கடுமையான எடையை அதிகரிக்க வழிவகுக்கிறது.

இதுமட்டுமின்றி, கரோனா தொற்று மீதான அச்சத்தின் காரணமாக, தங்களது அன்றாட வாழ்க்கையை நான்கு சுவர்களுக்குள் முடித்துக்கொள்கின்றனர். ஊரடங்கிற்குப் பிறகு, பெரும்பாலானோர் எடை கூடியுள்ளது அல்லது தொப்பை உருவாகியுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இப்பிரச்சினை குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.

உடல் பருமன் காரணங்கள்:

  • மரபியல் பிரச்சினை
  • ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்
  • ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை
  • தூக்கமின்மை
  • உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை
  • மருந்துகள்
  • சுகாதாரப் பிரச்சினைகள்

உடல் பருமன் தடுக்கும் முறைகள்:

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், பானங்கள் அல்லது எண்ணெய்யில் வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். என்றாவது ஒருநாள் சாப்பிடுவது தவறில்லை. ஆனால், அத்தகைய உணவுகளை உட்கொள்ளும்போது அளவை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். சிப்ஸ், பிஸ்கட், குக்கீகள் போன்றவற்றுக்குப் பதிலாக ஆரோக்கியமான தின்பண்டங்களைச் சாப்பிட வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்வது நல்லது.

உடற்பயிற்சி அவசியம்

30-45 நிமிடங்கள் தினசரி பயிற்சி மிகவும் முக்கியமானது. உடற்பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியாவிட்டாலும், வீட்டிலிருந்தபடியே யோகா, ஏரோபிக்ஸ், ஜம்பிங், ஸ்கிப்பிங், சிறிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

வேலைக்கு நடுவே பிரேக் அவசியம்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணிசெய்வதற்குப் பதிலாக, நடுவே சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு வாக்கிங் செல்வது நல்லதாகும்.

மன அழுத்தமில்லாமல் இருங்கள்

மன அழுத்தம், பதற்றம் எடையை அதிகரிக்கவும் அல்லது பருமனாக இருக்க வழிவகுக்கும். எனவே, நன்றாகத் தூங்குங்கள், மன அழுத்தமில்லாமல் இருக்க உங்கள் மனத்தை நிதானப்படுத்துங்கள். தியானம் செய்வதும் சிறந்த வழியாகும்.

அவசரம் வேண்டாம்

சாப்பிடுகையில் 32 முறையாவது மென்று உண்ண வேண்டும் என உங்கள் தாத்தா, பாட்டி அறிவுறுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், மிக வேகமாகச் சாப்பிடுவது அதிகப்படியான உணவைச் சாப்பிட வழிவகுக்கும், இதனால் எடை அதிகரிக்கும். இது குடல் இயக்கத்தையும் பாதிக்கிறது.

சிறந்த தூக்கம்

தூக்கமும் எடை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம். தூக்கமின்மை ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும், உங்கள் பசியை அதிகரிக்கும். இதனால், சரியான தூக்கம் உங்களைப் பல பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கும்.

அதிக எடை ஒருவருக்கு உடல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமின்றி மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். சிலரின் பாலியல் வாழ்க்கையும் உடல் பருமன் நோயால் பாதிக்ககூடும். மேலும், உடல் பருமனாக இருப்பதால் பல இடங்களில் அவமானங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அத்தகைய சமயத்தில் மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற நிலைமைக்குத் தள்ளப்படுவீர்கள். அவற்றைத் தவிர்ப்பது உங்களிடம்தான் உள்ளது. உணவில் அதிக பழங்கள், காய்கறிகளைச் சேர்ப்பது உடல் பருமனைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.