ETV Bharat / bharat

லாலுவின் கட்சிக்கு ஆதரவாகக் களமிறங்கும் சிவசேனா! - தேஜஸ்வி யாதவ்

மும்பை : ”பிகார் முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆச்சரியமடைய மாட்டேன்” என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா
சிவசேனா
author img

By

Published : Oct 31, 2020, 10:42 PM IST

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிகார் முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆச்சரியமடைய மாட்டேன் என சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். புனே பத்திரிக்கையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், "சிபிஐ, அமலாக்கத்துறை என பல்வேறு அமைப்புகள் ஒரு இளைஞரை அச்சுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை முடக்கும் மத்திய அரசுக்கு அவர் சவால் விடுத்து வருகிறார்.

எனவே, பிகார் முதலமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆச்சரியப்பட மாட்டேன்" என்றார். அதேபோல், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவையும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.