ETV Bharat / bharat

பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கான பெண் காவலர்களின் எண்ணிக்கை 13,000 ஆக உயர்வு - பெண்களின் பாதுகாப்பு மார்ஷல்கள்

டெல்லி: பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்துகளில் பணியமர்த்தப்பட்ட பெண் காவலர்களின் (மார்ஷல்கள்) எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்த்தப்படும் என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Women security
author img

By

Published : Oct 28, 2019, 8:00 PM IST

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், அரசு மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் டெல்லியில் இயங்கும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கூடுதலாக பெண் காவலர்கள் (மார்ஷல்கள்) பணியமர்த்தப்படுவார்கள் என்றார்.

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பதற்காகவும் இம்மார்ஷல் பிரிவை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.

தற்போதைய மார்ஷல்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 400ஆக உள்ள நிலையில், மங்களகரமான பாய் தூஜ் விழா நாளை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், டெல்லி ஒரு பெரிய குடும்பம் போன்றது எனவும், அதில் தான் மூத்த மகன், அதனால் தனது சகோதரிகள், தாய்மார்களின் பயண செலவை நாளை முதல் தான் சுமப்பதாகவும் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.