ETV Bharat / bharat

சரமாரியாக கேள்வி கேட்ட பெண்...! ஆடிப்போன அமைச்சர் - கேள்வி

கடலுார்: தோ்தல் பரப்புரைக்காக கடலூர் வந்த பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமி, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோரிடம் பெண் ஒருவர் சரமாரியாகக் கேள்வி கேட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பெண்மணி
author img

By

Published : Mar 26, 2019, 6:28 PM IST

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவுக்கு கடலூர் மக்களவைத்தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமி இன்று பரப்புரை செய்ய வந்தார். அப்போது அவருடன் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கூட்டணி கட்சியினர் புடைசூழ வாக்கு சேகரித்தனர்.

அப்போது, கோவிந்தசாமி முதன்முதலாக ஒரு வீட்டில் வாக்கு சேகரித்தபோது, அங்கிருந்த பெண், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

  • உங்கள் ஆட்சியில் என்ன மக்கள் நலப்பணிகள் செய்துவிட்டீர்கள்?
  • கடலூர் நகராட்சியில் அவலநிலை பற்றி உங்களுக்கு தெரியுமா?
  • வேலைவாய்ப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டதா?
  • பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா?

என பல கேள்விக்கணைகளை அந்தப் பெண் தொடுக்க இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் எம்.சி.சம்பத்மற்றும் பாமக வேட்பாளர் கோவிந்தசாமி சற்று ஆடித்தான் போனார்கள்.

இதைக்கண்ட அதிமுகவினர் கேள்வி கேட்ட பெண்ணை சகட்டு மேனிக்கு திட்டியும், மிரட்டியும் உள்ளதாக தெரிகிறது.

இதில் உச்சகட்டமாக பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் அப்பெண்ணிடம் "முதன்முதலில் வாக்கு கேட்டு உங்கள் இல்லம் தேடி வந்தவர்களிடம் இப்படியா பேசுவது! நீங்கள் என்ன லண்டனிலிருந்து வந்துள்ளீர்களா? எனக் கேட்டு மிரட்டியுள்ளார்.

வாக்கு கேட்டு வந்த அதிமுக அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பெண். முதன் முதலில் வாக்கு கேட்ட வீட்டிலிருந்த பெண் கேட்ட கேள்விகளால்  பிரச்சாரத்தில் பரபரப்பு. கேள்வி கேட்ட பெண்ணை மிரட்டிய பாமகவினர் கடலூரில் பதற்றம்.

கடலூர்
மார்ச் 26,

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக போட்டியிடுகின்றது. பாமகவின் வேட்பாளராக இரா.கோவிந்தசாமி நிறுத்தப்பட்டுள்ளார்.அவர் இன்று முதன்முதலாக கடலூர் நகர பகுதியில் தனது வாக்கு சேகரிப்பு துவக்கினார். இவருடன் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  மற்றும் அக்கட்சியினர் புடைசூழ வாக்கு சேகரிப்பை  துவக்கினர்.

தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் வழக்கமாக தேர்தல் வாக்கு சேகரிக்கும் முறையில் இன்று சாவடி பகுதியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அதே பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார்.

முதன்முதலாக வேட்பாளருடன் சென்று வாக்கு கேட்க அந்த வீட்டில் இருந்த பெண்மணி  அமைச்சர் எம் சி சம்பத்திடம் நேருக்கு நேராக சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். உங்கள் ஆட்சியில் என்ன மக்கள் நலப்பணிகள் செய்துவிட்டீர்கள்.? கடலூர் நகராட்சியில் அவல நிலை பற்றி உங்களுக்கு தெரியுமா.? வேலைவாய்ப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டதா.?  பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா.? என அந்தப் பெண் கேள்விக்கணைகளைத் தொடுக்க இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் எம்.சி.சம்பத்  மற்றும் பாமக வேட்பாளர் கோவிந்தசாமி அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதைக்கண்ட அவர்களின் படைபட்டாளங்கள்  கேள்வி கேட்ட பெண்மணியை சகட்டு மேனிக்கு திட்டி மிரட்ட  செய்தனர். இதில் உச்சக்கட்டமாக பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் அப்பெண்மணியிடம் முதல் முதலில் வாக்கு கேட்டு உங்கள் இல்லம் தேடி வந்தவர்களிடம் இப்படியா பேசுவது நீங்கள் என்ன லண்டனிலிருந்து வந்துள்ளீர்களா?  என கேட்டு மிரட்டினார். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் இடங்களில் பொதுமக்கள் தங்களை கேள்வி கேட்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர்களை மிரட்டி வரும் சம்பவம் கடலூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video send ftp 
file name: TN_CDL_02_26_MC SAMPATH_CANVAS_7204906
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.