ETV Bharat / bharat

கணவருக்கு 'கும்பி பாகமா' - என்னம்மா இப்படி எல்லாம் இறங்கிட்டீங்க! - சுடு எண்ணெய்யை முகற்றில் ஊற்றிய

பெங்களூரு: கணவர் தன்னை விட்டு வேறொரு பெண்ணுடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் உள்ளார் என எண்ணிய மனைவி, சுடு எண்ணெய்யை கணவன் முகத்தில் ஊற்றிய சம்பவம் கணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

women pours hot oil on husband over affair suspicion

author img

By

Published : Feb 11, 2020, 11:40 PM IST

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுநாத்(40). அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி பத்மா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் தனது கணவர், தான் பணிபுரியும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருப்பதாக எண்ணிய பத்மா, கடந்த சனிக்கிழமை இரவு இது பற்றி, தனது கணவருடன் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து மறுநாள் காலை (ஞாயிற்றுக்கிழமை) தனது கணவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது, ஒரு லிட்டர் அளவிலான சமையல் எண்ணெய்யை காய்ச்சி, அவரது முகத்தில் ஊற்றிவிட்டு, பத்மா தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

இதையடுத்து வலி தாங்கமுடியாமல் கதறிய மஞ்சுநாத்தை அண்டை வீட்டுக்காரர்கள், உடனடியாக மீட்டு ஐம்பது விழுக்காடு தீக்காயங்களுடன் அருகிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதியளித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து பெங்களூரு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பத்மாவைக் கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை வீசாரித்த நீதிபதி பத்மாவை நீதிமன்றக் காவலில் வைத்து, விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

கணவன் மீது சந்தேகம் அடைந்த மனைவி சுடு எண்ணெய்யை முகத்தில் ஊற்றிய சம்பவம், ஆண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • இதையும் படிங்க:

தேனி ஆவினில் இடைக்கால குழு நியமனம்: தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.