ETV Bharat / bharat

காதலித்து திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு இப்படி ஒரு தண்டனையா...! - ஜபுவா

போபால்: வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்த நபரை காதலித்து மணம் முடித்தற்காக இளம்பெண்ணுக்கு விநோத தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை
author img

By

Published : Apr 14, 2019, 10:04 AM IST

மத்தியப்பிரேதசம் மாநில தலைநகர் போபால் நகரில் உள்ள ஜபுவா மாவட்டத்தில் தேவிகார் பகுதியில் வசித்துவந்த இளம்பெண் ஒருவர் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்த நபரை காதலித்துள்ளார். பின் அவரையே திருமணமும் செய்துகொண்டார்.

இந்த விவகாரம் அப்பெண்ணின் வீட்டிற்கும் அவரது சமுதாயத்தினருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து அப்பெண்ணின் சமுதாயத்தினர் அப்பெண் தன் கணவரை தோளில் சுமந்தபடி தூக்கிக்கொண்டு நடந்து செல்லும்படி வினோத தண்டனையை வழங்கியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில் அப்பெண்ணை ஆண்கள் சூழ்ந்து கொண்டு தொடர்ந்து நடப்பதற்கு கட்டாயப்படுத்துகின்றனர். ஓய்வுக்காக அவர் நிற்கும்பொழுது சுற்றி இருப்பவர்கள் கேலி செய்ததுடன், பெண்ணை நடக்கும்படி கூறி கூச்சலிட்டு உள்ளனர். இதனால் உதவியற்ற நிலையில் அந்தப்பெண் தொடர்ந்து நடப்பது காண்பவரின் மனதை கலங்கவைக்கிறது.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ஜபுவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினித் ஜெய்ன் இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்துள்ளார். மேலும் இச்செயல் புரிந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

காதலித்து திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு வழங்கிய தண்டனை

Intro:Body:

https://www.aninews.in/news/national/general-news/mp-woman-forced-to-carry-husband-on-shoulders-as-punishment-for-marrying-man-of-another-caste20190414074954/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.