டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. வாக்களிக்கும்போது ஆண் துணையின் ஆலோசனையைக் கேட்டு வாக்களிக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் கூறியதாக ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தங்கள் வாக்கை யாருக்கு செலுத்த வேண்டும் என முடிவெடுக்கும் தகுதி பெண்களுக்கு இல்லை என நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கேஜ்ரிவாலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
आप क्या महिलाओं को इतना सक्षम नहीं समझते की वे स्वयं निर्धारित कर सके किसे वोट देना है ? #महिलाविरोधीकेजरीवाल https://t.co/fUnqt2gJZk
— Smriti Z Irani (@smritiirani) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">आप क्या महिलाओं को इतना सक्षम नहीं समझते की वे स्वयं निर्धारित कर सके किसे वोट देना है ? #महिलाविरोधीकेजरीवाल https://t.co/fUnqt2gJZk
— Smriti Z Irani (@smritiirani) February 8, 2020आप क्या महिलाओं को इतना सक्षम नहीं समझते की वे स्वयं निर्धारित कर सके किसे वोट देना है ? #महिलाविरोधीकेजरीवाल https://t.co/fUnqt2gJZk
— Smriti Z Irani (@smritiirani) February 8, 2020
முன்னதாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெளியே சென்று வாக்களியுங்கள். பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வீட்டின் பொறுப்பை நீங்கள் எடுத்துக் கொள்வது போல் நாட்டின் பொறுப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
டெல்லியின் பொறுப்பை உங்களின் தோள்களில் ஏற்றிக் கொள்ளுங்கள். வீட்டில் உள்ள ஆண்களை அழைத்துச் சென்று தேர்தலில் வாக்களியுங்கள். வாக்கு உங்கள் உரிமை என்பது குறித்து விவாதம் செய்ய தயங்காதீர்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: வாக்களிக்க வெளியே வாருங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்