டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மெட்ரோ ரயில், மாநகர பேருந்து ஆகியவற்றில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், பெண்கள் பயணக் கட்டணச் செலவை டெல்லி அரசு ஏற்கும் என்று தெரிவித்தார்.
மேலும் இலவச பயணத்தை விரும்பாத பெண்கள் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்த கெஜ்ரிவால், இந்த திட்டம் குறித்த அறிக்கையை ஒரு வாரத்தில் மெட்ரோ, டெல்லி போக்குவரத்து கழக அலுவலர்கள் சமர்பிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். இந்தத் திட்டம் எவ்வாறு எப்படி செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டெல்லி அரசு இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.