லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூரிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் ஆராதனா ராய்(35). இவருக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அமித் குஷால் என்பவருக்கும் பள்ளியில் விடுமுறை எடுப்பது தொடர்பாக பிரச்னை இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், அவர்களது வாக்குவாதம் முற்றிய நிலையில், குஷால், ஆராதனாவை பள்ளி வளாகத்திலேயே இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதையறிந்த சக ஆசிரியர்கள், ஆராதனாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பின்னர், ஆராதனாவின் உடலை காவல் துறையினர் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், குஷால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை!