ETV Bharat / bharat

ம.பி.யில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பிறப்புறுப்பைச் சிதைத்த கொடூரர்கள்! - rod inserted in her private parts in Madhya Pradesh

போபால்: சித்தி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமின்றி அவரது பிறப்புறுப்பை, கொடூரர்கள் இரும்பு ராடால் சிதைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Woman gang-raped
Woman gang-raped
author img

By

Published : Jan 11, 2021, 3:39 PM IST

மத்தியப் பிரதேசம் மாநிலம் சித்தி மாவட்டத்தில் அமிலியா காவல் எல்லைக்குள்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் கைம்பெண்ணை, மூன்று பேர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், அப்பெண்ணின் பிறப்புறுப்பை இரும்பு ராடால் கொடூரமாக காயப்படுத்தியுள்ளனர்.

தற்போது, அப்பெண் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், மூவரையும் காவல் துறையினர் அதிரடியாக கைதுசெய்தனர்.

காவல் துறையினர் அளித்த தகவலின்படி தெரியவருவதாவது:

நேற்றிரவு அப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மூன்று பேர், அப்பெண்ணிடம் தண்ணீர் கேட்டு வெளியே வர வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அப்பெண் பயந்து வீட்டைவிட்டு வெளியே வர மறுத்துள்ளார்.

இதையடுத்து, வீட்டுக்குள் புகுந்த மூவரும், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்து பிறப்புறுப்பையும் கடுமையாக காயப்படுத்தி தப்பியோடியுள்ளனர்.

பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.