உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் நகரில் வசித்துவருபவர் மொகத் ஜாகிர். வாகன ஓட்டியான இவருக்கு ஷாபனா என்ற மனைவி உள்ளார். இதனிடையே, அலியா என்ற பெண்ணுடன் தொடர்பிலிருந்த ஜாகிர் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரைத் திருமணம் செய்துகொண்டார்.
இதனால் ஜாகிரின் இரண்டு மனைவியான அலியாவுக்கும், முதல் மனைவியான ஷாபனாவிற்கு நீண்ட காலமாக தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஏழு மாத கர்ப்பிணியான அலியா தன் மைத்துனன் முஸ்கானுடன் சேர்ந்து நேற்று மருந்து வாங்கச் சென்றுள்ளார்.
இவர்கள் மருந்து வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது, திடீரென துப்பாக்கியோடு வந்த ஷாபனா, அலியாவை அங்கேயே சுட்டுக் கொன்றார்.
தகவலறிந்து சம்பவம் இடம் விரைந்த காவல் துறையினர், அலியாவின் உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை செய்த ஷாபனாவை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாகிர் தலைமறைவாகிவிட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அஜித் பண்டிட் - தலைவர்கள் இரங்கல்