ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரின் படமலூ பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்த தகவல் கிடைத்ததால் பாதுகாப்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டனர். இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் இருந்த வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதையடுத்து பயங்கரவாதிகளுக்கு இடையே இன்று (செப்டம்பர் 17) மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் அடையாளம் குறித்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தாக்குதல் நடந்த இடத்திலிருந்து ஏ.கே. துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
-
#SrinagarEncounterUpdate: 02 more #unidentified #terrorists killed (total 03). Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/jM8sq21bFn
— Kashmir Zone Police (@KashmirPolice) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#SrinagarEncounterUpdate: 02 more #unidentified #terrorists killed (total 03). Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/jM8sq21bFn
— Kashmir Zone Police (@KashmirPolice) September 17, 2020#SrinagarEncounterUpdate: 02 more #unidentified #terrorists killed (total 03). Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/jM8sq21bFn
— Kashmir Zone Police (@KashmirPolice) September 17, 2020
தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகர் நகரின் மையத்தில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சதி முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் உளவு நிறுவனமான இன்டர்-சர்வீஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:புல்வாமாவில் என்கவுன்ட்டர்; 3 பயங்கரவாதிகள் சிக்கினர்?