ETV Bharat / bharat

பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு - முன்னாள் கணவரின் உறவினர்கள் கைது! - கூட்டுப் பலாத்காரம்

போபால்: பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த அப்பெண்ணுடைய முன்னாள் கணவரின் உறவினர்கள் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Woman gang raped by ex-husband's relatives
author img

By

Published : Oct 9, 2019, 1:56 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லம் மாவட்டத்தில் உள்ள தால் காவல் நிலையம் அருகில் பெண் ஒருவர் தனது மூன்று வயது குழந்தையுடன் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். தகவலறிந்த காவல் துறையினர் அப்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது, அப்பெண்ணை முன்னாள் கணவரின் உறவினர்கள் நான்கு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், அவரை விஷம் குடிக்கச் சொல்லியும் வற்புறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் வன்புணர்வு செய்த நான்கு பேரை கைதுசெய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாகச் செயல்பட்ட பெண் ஒருவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். தலைமறைவாக உள்ள பெண்ணின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.