ETV Bharat / bharat

முத்தலாக் வழங்கிய கணவருக்கு எதிராக போலீஸில் புகாரளித்த பெண்! - latest UP news

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் முத்தலாக் வழங்கிய கணவருக்கு எதிராக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

Triple Talaq in UP
Triple Talaq in UP
author img

By

Published : Oct 25, 2020, 1:27 PM IST

முத்தலாக் மூலம் விவாகரத்து அளிக்கும் பழக்கம் இஸ்லாமியர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்துவந்தது. பெண்களின் நலனிற்கு எதிரான இச்சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பெண்ணியவாதிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் முத்தலாக் சட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், காலாவதியான இந்த முத்தலாக் சட்டத்தை பயன்படுத்தி, விவாகரத்து வழங்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் கண்ணவுஜ் என்ற மாவட்டத்தில் முத்தலாக் முறையைப் பயன்படுத்தி, பெண் ஒருவருக்கு அவரது கணவர் விவாகரத்து அளித்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கு தாயான அப்பெண் கூறுகையில், "எனக்கும் எனது கணவருக்கும் பணம் தொடர்பாக சிறு தகராறு ஏற்பட்டது. இது பெரிய சண்டையாக உருவெடுத்தது. அதன் பின், எனக்கு முத்தலாக் மூலம் விவாகரத்து அளித்துவிட்டு, அவர் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

வேறு ஒரு பெண்ணை மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எனது மாமியார் கூறியதை கேட்டே அவர் எனக்கு முத்தலாக் விவகாரத்து அளித்தார். இது குறித்து நான் காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளேன். ஆனால், இதுவரை அவர்கள் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க: தடைகளை வென்ற சாதனை பெண்மணி லட்சுமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.