ETV Bharat / bharat

ஆம்பன் புயலுக்கு நடுவே பிரசவ வலியால் துடித்த பெண் - கைகொடுத்த மீட்புத்துறையினர்!

புபனேஸ்வர்: ஜன்ஹாரா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆம்பன் புயலின்போது தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் வாகனத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

Woman delivers baby in fire service vehicle as cyclone 'Amphan' pounds Odisha

author img

By

Published : May 20, 2020, 5:34 PM IST

ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டம், ஜன்ஹாரா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஜானகி சேதி. கர்ப்பிணியான இவர் இன்று காலை பிரசவ வலியால் துடித்துள்ளார்.

இதையறிந்த ஆம்பன் புயல் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர், ஜானகியை தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். செல்லும் வழியிலேயே அந்தப் பெண் குழந்தையினைப் பெற்றெடுத்தார். பின்னர் தாயும், சேயும் மகாகல்பாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இதுவரை ஒடிசாவில் தாழ்வானப் பகுதியில் வசித்து வந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மக்கள் விரைவில் மீட்கப்படுவர் என ஆம்பன் புயலுக்கான சிறப்பு மீட்பு ஆணையர் ஜனா தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரையைக் கடக்கும் ஆம்பன் புயல்: துரித தகவல்கள் உடனுக்குடன்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.