உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பள்ளி மாணவிகளை இளைஞர் ஒருவர் கிண்டல் செய்துள்ளார். இதைப் பார்த்த பெண் காவலர், இதுபோன்று நடக்கக் கூடாது என்று எச்சரித்தார்.
இதை பொருட்படுத்தாமல் அந்த இளைஞர், மாணவிகளை தொடர்ந்து கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் காவலர், சிங்கம் போன்று சீறி அந்த இளைஞரின் சட்டை காலரைப் பிடித்து அடித்து துவைத்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற பெண் காவலர், காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி இளைஞரின் முகத்தில் அடிக்க ஆரம்பித்தார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வலம் வருகிறது. இருப்பினும் சிலர் இதனை மனித உரிமை மீறல் என்று கருத்து தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருவதையடுத்து, இக்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க : உத்தரப்பிரதேசத்தில் பெண் மீது திராவகம் வீச்சு!