மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் (ஜூலை 9) ஹவுரா பாலத்தின் மீது ஏறினார். அப்போது அவ்வழியாக நடைபாதையில் சென்றவர்கள் அவர் பாலத்தின் மீது ஏறியதை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஹவுரா காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் சிறப்பு குழுவுடன் இணைந்து அப்பெண்ணை கீழே இறக்க முயற்சி செய்தனர். ஆனால், அமர்த்தியா சென் பிரிவில் தனக்கு நோபல் பரிசு கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன், இல்லாவிட்டால் இறங்க மாட்டேன் என அந்த பெண் அடம் பிடித்தார்.
இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்திய பின்னரே அவர் இறுதியாக கீழே இறங்க சம்மதித்தார்.