ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில், நாதா கி நங்கல் என்ற கிராமத்தில் வசித்து வந்தார், சுனிதா. இவரும் பாகேஷ்குமார் என்ற இளைஞனும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாகேஷ்குமார் சுனிதாவைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதற்கு சுனிதா மறுப்புத் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த பாகேஷ் தன் காதலி சுனிதாவின் வீட்டிற்குள் புகுந்து, அவரை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்.
இதையடுத்து, சுனிதாவின் குடும்பத்தினர், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பலத்த காயமடைந்த சுனிதா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, பாகேஷ் குமார் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.
இது குறித்து படான் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் நரேந்திர பதன் கூறும்போது, 'குற்றச்செயலில் ஈடுபட்டவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.
சுனிதா, பாகேஷ் ஆகிய இருவரும் போட்டித் தேர்வுக்குத் தயாராகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரபலமான முதலமைச்சர்கள் பட்டியல் : முதலிடம் பிடித்த நவீன் பட்நாயக்