இந்தியாவில் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த சந்திரபால் சிங் என்ற விவசாயி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், "எங்கள் பகுதியில் குடிநீர் உப்புத் தன்மையுடன் வழங்கப்படுகிறது. அதனை நான் உட்பட என் குழந்தைகள் யாவரும் குடிக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளோம். உப்பு தன்மையுடன் இருக்கும் குடிநீரால் பயிர்கள் மடிந்துவிடுகின்றன. என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பாட்டில் குடிநீரை வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை.
இது குறித்து அரசு அலுவலர்களிடம் தெரிவித்த பிறகும்கூட அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என் பெண் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள பிரதமரிடம் கோரிக்கை விடுக்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.