கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பால் உயிரிழப்புகளைவிட மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கூலித்தொழிலாளர்களும் வேலை இல்லாமல் தவித்துவருகின்றனர். அதற்கு ஜார்கண்ட் வேளாண்மை கூலித் தொழிலாளர்களும் விதிவிலக்கல்ல.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள கிராமத்தில் வசித்துவரும் மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வேலையில்லாமல் தவித்துவந்துள்ளனர்.
இந்நிலையில், முந்திரி சாகுபடி செய்யலாம் என நினைத்த ஒரு தொழிலாளி நண்பர்களுடன் சேர்ந்து முந்திரி சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். பின்பு ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து ஆறு ஏக்கர் நிலத்தில் முந்திரி சாகுபடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக சர்பார் என்ற தொழிலாளி கூறுகையில், "இந்த ஆறு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட முந்திரி சாகுபடியை நம்பித்தான் எங்கள் கிராமம் உள்ளது. யாராவது முந்திரியைத் திருடினால் அவர்களிடம் ஊர் சார்பாக 2000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சொமெட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்குப் போட்டியாகக் களமிறங்கிய அமேசான்!